சுழலுக்கு நன்றாக ஒத்துழைக்கும் காலி ஆடுகளம்!

காலி டெஸ்டின் மூன்றாம் நாளில் இலங்கையணி சகல விக்கெட்டுக்களையும் இழந்து 267 ஓட்டங்களை பெற்றது. தற்போது, இரண்டாவது இன்னிங்சில் 118 ஓட்டங்களிற்கு 5 விக்கெட் என நியூசிலாந்து திணறி வருகிறது.

நேற்று இரண்டாம் நாள் முடிவில் 222 ஓட்டங்களிற்கு 7 விக்கெட் என்ற நிலையில் ஆட்டத்தை முடித்த இலங்கை, இன்று மேலதிகமாக 45 ஓட்டங்கள் சேர்த்து ஆட்டமிழந்தது.

இலங்கை தரப்பில் டிக்வெல 61, மத்யூஸ் 50, மென்டிஸ் 53, லக்மல் 40 ஓட்டங்களை பெற்றனர். பின்வரிசையில் லக்மல் எதிர்பாராத விதமாக ஓட்டம் சேர்த்ததே, நியூசிலாந்தின் முதல் இன்னிங்ஸ் ஓட்டமான 249ஐ கடக்க உதவியது.

நியூசிலாந்தின் அஜாஸ் பட்டேல் 5 விக்கெட்டுக்களை வீழ்த்தினார்.

இரண்டாவது இன்னிங்சை ஆடும் நியூசிலாந்து தடுமாறி வருகிறது. ஆடுகளம் சுழல்பந்து வீச்சிற்கு நன்றாக ஒத்துழைக்கிறது. தனஞ்ஜெய டி சில்வா, எம்புல்தெனிய தலா 2 விக்கெட்டுக்களை வீழ்த்தினர்.

தற்போதுவரை நியூசிலாந்து 100 ஓட்ட முன்னிலை பெற்றுள்ளது.

இரண்டாவது இன்னிங்சில் இலங்கைக்கு அதிக சவால் காத்திருக்கிறது. குறிப்பாக முதல் இன்னிங்சில் இலங்கையின் முன்வரிசை வீரர்கள் பலர் சொதப்பியதை போல, இரண்டாவது இன்னிங்சிலும் சொதப்பினால் இலங்கை பாடு திண்டாட்டமே.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here