படகில் அவுஸ்திரேலியா சென்றவர்கள் விமானத்தில் திரும்பி வந்தனர்!


படகு மூலம் சட்டவிரோதமாக அவுஸ்திரேலியா சென்ற 13 இலங்கையர்கள் இன்று நாடு கடத்தப்பட்டுள்ளனர்.

மீன்பிடி இழுவைப் படகில் ஒரு குழுவாக இலங்கையை விட்டு வெளியேறியதாகக் கூறப்படுகிறது. அவர்கள் சிலாபத்தை சேர்ந்தவர்கள்.

இன்று காலை 6:30 மணியளவில் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை இவர்கள் வந்தடைந்தனர்.

மேலதிக விசாரணைகளுக்காக விமான நிலையத்தில் உள்ள குற்றப் புலனாய்வுத் துறை (சிஐடி) பிரிவினரிடம் அவர்களை குடிவரவு அதிகாரிகள்  ஒப்படைத்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here