தம்புள்ள விபத்தில் மூவர் பலி!

தம்புள்ளை – ஹபரண வீதியின் குடாகஸ்வெவ பகுதியில் இடம்பெற்ற விபத்தில் மூவர் உயிரிழந்துள்ளனர்.

அத்துடன் குறித்த விபத்தில் மேலும் இருவர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

வேன் ஒன்றும் டிப்பர் ரக வாகனம் ஒன்றும் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.

சம்பவத்தில் இரு பெண்கள் உட்பட மூவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here