பழைய வீடியோக்களை திருமணம் செய்யவிருந்த பெண்ணிடம் காட்டப்போவதாக மிரட்டி பணம் பறிக்க முயன்றவர்கள் கைது!

திருமணம் செய்யவிருந்த இளைஞர் ஒருவரிடம், கையடக்கத் தொலைபேசியின் சில வீடியோக்களை காண்பித்து, மிரட்டி பணம் பறிக்க முற்பட்ட இருவரை பொலிசார் கைது செய்துள்ளனர். கைதானவர்கள் ரயகம, பண்டாரகமவை சேர்ந்த 37, 29 வயதுடையவர்கள்.

முறைப்பாட்டாளரும் இவர்களும் முன்னர் நெருக்கமான நண்பர்களாக இருந்தவர்கள். முறைப்பாட்டாளர் அடுத்த சில நாட்களில் திருமணம் செய்யவிருக்கிறார்.

இளைஞன் தொடர்பாக அவர்களிடமிருந்த சில வீடியோக்காட்சிகளை, மனைவியின் உறவினர்களிடம் காண்பிக்கவுள்ளதாக இருவரும் மிரட்டல் விடுத்துள்ளனர். வீடியோவை காண்பிக்காமல் இருப்பதெனில் தமக்கு 5 இலட்சம் ரூபா பணம் தர வேண்டுமென்றும் குறிப்பிட்டுள்ளனர்.

இதையடுத்து, பண்டாரகம பொலிஸ் நிலையத்தில் இளைஞன் முறைப்பாடளித்தார். உடன் நடவடிக்கையெடுத்த பொலிசார், கப்பம் கோருபவர்களிற்கு பொறி வைத்தனர்.

இளைஞன் பணத்தை தருவதாக அவர்களிற்கு குறிப்பிட்டார். இதன்படி நேற்று (15) காலை பணத்தை பெற்றுக்கொள்ள முச்சக்கர வண்டியில் இருவரும் வந்துள்ளனர். அவர்களை பொலிசார் மடக்கிப்பிடித்தனர்.

பண்டாரகம பொலிசார் மேலதிக விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here