வட்டிப்பணம் கேட்கப்போன கோடீஸ்வர வர்த்தகர் கொன்று புதைப்பு!

படம்- லங்காதீப

புத்தளத்தில் காணாமல் போன முஸ்லிம் கோடீஸ்வர வர்த்தகர் கொன்று புதைக்கப்பட்ட இடத்தை பொலிசார் அடையாளம் கண்டனர். அவரது உடலின் எச்சங்கள் மீட்கப்பட்டதுடன், சந்தேகநபரும் கைதாகியுள்ளார்.

புத்தளம் நல்லந்தலுவவைச் சேர்ந்த ஏ.ஆர்.எம்.சஃபிஸ் (36) என்ற கோடீஸ்வர வர்த்தகரே கொல்லப்பட்டார். அவருக்கு இரண்டு பிள்ளைகள் உள்ளனர்.

தென்னந்தோட்டத்தின் உரிமையாளராக இவர், பிரதேசத்தில் வட்டிக்கு பணம் கொடுத்து வந்தார்.

இந்த மாதம் 11ம் திகதி தொழிலதிபர் வீட்டிலிருந்து காணாமல் போனது தொடர்பாக புத்தளம் பொலிஸ் நிலையத்தில் உறவினர்கள் முறைப்பாடளித்தனர்.

தொழிலதிபர் மோட்டார் சைக்கிளில் வட்டிப்பணம் வசூலிக்கச் சென்றிருந்தபோது, ​​கொலை இடம்பெற்றுள்ளது. அவரிடம் வட்டிக்கு பணம் வாங்கிய இன்னொரு வர்த்தகரே இந்த கொலையை செய்ததாக சந்தேகிக்கப்படுகிறது.

வர்த்தகரின் வீட்டிற்க சென்ற தொழிலதிபர் வட்டிப்பணத்தை கேட்டபோது, இருவருக்குமிடையில் தர்க்கம் உருவாகியது. அது மோதலாகி, தொழிலதிபர் அடித்துக் கொல்லப்பட்டுள்ளார்.

கொலை நடந்த வீட்டிலிருந்த சிசிரிவி காட்சிகளில் பதிவாகிய காட்சிகளின் அடிப்படையிலேயே சந்தேகநபர்கள் கைதாகியுள்ளனர்.

விசாரணைகளின் பின்னர், கொல்லப்பட்ட தொழிலதிபர் அடக்கம் செய்யப்பட்ட இடத்தை பொலிசார் அடையாளம் கண்டனர். புழுதிவயல் வெட்டுக்காடு பகுதியில் சடலம் புதைக்கப்பட்டிருந்தது.

புத்தளம் நீதிவானின் முன்பாக அகழ்வு பணிகள் இடம்பெற்றன. தடிகள், சிரட்டைகளின் கீழ் உடல் புதைக்கப்பட்டிருந்த நிலையில் மீட்கப்பட்டது.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here