இரகசிய வாக்குமூலமளித்த சஹ்ரான் மனைவி!

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதல்களின் சூத்திரதாரி முகமது சஹ்ரானின் மனைவி , கோட்டை நீதிவான் ரங்க திசனாயக்கவிற்கு இன்று (15) இரகசிய வாக்குமூலம் அளித்தார்.

கொழும்பில் உள்ள ஷாங்க்ரி-லா ஹோட்டலில் தாக்குதல் நடத்திய சஹ்ரான், இல்ஹாம் அஹமது ஆகியோரின் மரண விசாரணைகளின் போதே, சஹ்ரானின் மனைவி அப்துல் காதர் பாத்திமா இரகசிய வாக்குமூலம் வழங்கினார்.

முகமது சஹ்ரானின் நான்கு வயது மகள் சாட்சி விசாரணைக்காக நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டிருந்தார்.

இதற்கிடையில், இல்ஹாம் அகமதுவின் தந்தையான வர்த்தகர் இப்ராஹிம் ஹாஜியார் மற்றும் இரண்டு சகோதரர்களும் இன்று முற்படுத்தப்பட்டனர்.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here