மல்லுக்கட்டிய தமிழ் உறுப்பினர்கள்: தமிழ் விளங்காமல் வெளிநடப்பு செய்த சிங்கள உறுப்பினர்கள்

வவுனியா நகரசபை அமர்வு தவிசாளர் கௌதமன் தலைமையில் இன்று இடம்பெற்றிருந்தது. இதன்போது வவுனியா நகரில் நடைபாதை வியாபாரத்திற்கு அனுமதி அளிப்பதில்லை என்று சபையினால் தீர்மானிக்கபட்டு அது நடைமுறைப்படுத்தபட்டிருந்தது எனினும் சில நாட்களில் மீண்டும் நடைபாதை வியாபாரத்திற்கு அனுமதி வழங்கபட்டிருந்தது இதற்கு காரணம் என்ன என்று உறுப்பினரான ரி.கே,ராஜலிங்கம் தவிசாளரிடம் விளக்கம் கோரியிருந்தார்.

குறித்த விடயம் சபையில் அனைத்து உறுப்பினரது சம்மதத்துடன் தீர்மானிக்கபட்டது. எனினும் நடைபாதை வியாபாரிகளை அகற்றுவதில் தவிசாளர் மாத்திரமே விருப்பம் தெரிவித்ததாக சில உறுப்பினர்கள் வெளியில் சென்று நடைபாதை வியாபாரிகளிடம் தெரிவித்துள்ளார்கள் என்று தவிசாளர் விசனம் தெரிவித்தார்.

இதன்போது குறுக்கிட்டு பேசிய உறுப்பினர் பிரசன்னா குறித்த தீர்மானம் எடுக்கபட்டநிலையில் நடைபாதை வியாபாரிகளோடு நான் கலந்துரையாடி கொண்டிருந்தபோது சக உறுப்பினர் காண்டீபன் அவ்விடத்திற்கு வந்து நடைபாதை வியாபாரிகளிற்கு எதிராக நான் செயற்பட்டதாக அவர்களிடம் தெரிவித்ததாக குற்றம் சாட்டினார்.

இதன்போது குறுக்கிட்ட காண்டீபன் அவ்விடத்தில் வியாபாரிகள் யாரும் நிற்கவில்லை, சபையில் இடம்பெறும் விடயங்களை வெளியில் போய் கதைக்கவேண்டிய தேவை தனக்கில்லை விடயங்களை நேரடியாக கதைப்பவன் நான் என தெரிவித்தார். இதனால் இரண்டுபேரும் சற்றுநேரம் கடுமையாக மோதிக்கொண்டனர்.

சிங்கள உறுப்பினர்கள் வெளிநடப்பு

குறித்த விடயம் தொடர்பாக உறுப்பினர்களால் காரசாரமாக விவாதம் சென்று கொண்டிருந்த நிலையில் தமக்கு எதுவும் விளங்கவில்லை. இது சிங்களத்தில்,மொழிபெயர்ப்பு செய்யப்படவல்லை என தெரிவித்து சபையின் சிங்கள உறுப்பினர்கள் மூன்று பேரும் வெளிநடப்பு செய்திருந்தனர். எனினும் ஏனைய உறுப்பினர்களால் அவர்கள் அழைக்கபட்டு மொழிபெயர்பு செய்யபட்டுவிடயம் தொடர்ந்து இடம்பெற்றிருந்தது.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here