நல்லூரில் ஸ்கானர் பரிசோதனை ஆரம்பித்தது: ஓவராக அலாரம் அடிப்பதால் திண்டாட்டம்!


யாழ்ப்பாணம் நல்லூர் ஆலய வருடாந்த மகோற்சவத்திற்கு வரும் பக்தர்கள் மீதான சோதனை நடவடிக்கை விமர்சனங்களை கிளப்பிய நிலையில், சற்று முன்னர் தொடக்கம் மெட்டல் டிடெக்டர்கள் (Security Metal Detectors) பரிசோதனை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இன்று (15) மாலை 6.30 மணியளவில் இருந்து நல்லூர் ஆலயத்திற்கு வரும் பக்தர்கள் அனைவரும், மெட்டல் டிடெக்டர்கள் பரிசோதனையின் பின்னர் ஆலயத்திற்குள் அனுமதிக்கப்படுகின்றனர்.

நல்லூர் ஆலயத்திற்கு வரும் பக்தர்கள் உடற்பரிசோதனைக்கு உட்படுத்தப்படக்கூடாதென எழுந்த கருத்துக்களை அடுத்து வடக்கு ஆளுனரின் ஏற்பாட்டில், மெட்டல் டிடெக்டர்கள் பரிசோதனை இயந்திரங்கள் கொழும்பிலிருந்து எடுத்து வரப்பட்டுள்ளன.

இதற்கான வாடகை பணத்தை வடமாகாணசபையே செலுத்தும்.

இதேவேளை, மெட்டல் டிடெக்டர்கள் பரிசோதனை தொடருமா என்பதை உறுதி செய்ய முடியாத நிலையுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். ஏனெனில், பக்தர்களின் சிறிய ஊசிகள், தொலைபேசி என்பவற்றிகு கூட அலாரம் ஒலிப்பதால், கிட்டத்தட்ட அனைவருமே மீண்டும் உடற்பரிசோதனைக்கு உள்ளாகும் நிலைமையே தற்போது ஆலயத்தில் உள்ளது.

இந்த நிலைமையால் உபகரணத்தை பொருத்தும் தொழில்நுட்பவியலாளர்களும், ஏற்பாட்டாளர்களும் திண்டாட்டமாக நிலைமையில் உள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here