உங்கள் நிலைப்பாட்டை இப்போதே மக்கள் முன் சொல்லுங்கள்: ரணிலிடம் வேண்டுகோள் விடுத்த சுமந்திரன்!

ரணில் விக்கிரமசிங்க தலைமையலான ஐ.தே.க கட்சியின் தமிழ் மக்கள் தொடர்பான நிலைப்பாட்டை பகிரங்கப்படுத்த வேண்டுமென தெரிவித்துள்ளார் எம்.ஏ.சுமந்திரன்.

இன்று யாழ் குருநகரில் நடந்த நிகழ்வின் போது, உரையாற்றிய சுமந்திரன், மேடையில் இருந்த ரணில் விக்கிரமசிங்கவை நோக்கி இந்த கோரிக்கையை விடுத்தார்.

அவர் மேலும் தெரிவித்தபோது,

இவற்றை நாங்களே தீர்மானித்து, நாங்களே அமுல்படுத்தக் கூடிய அரசியல் உரிமைகளே எங்களது எதிர்பார்ப்புக்கள். எங்களது தலைவிதியை நாங்களே தீர்மானிகக்கூடிய அரசியல் உரிமையே எமக்கு தேவை.

நாங்கள் இந்த அரசுக்கு ஆதரவாக கடந்த 4 வருடங்களாக செயற்பட்ட போது, பொருளாதார நன்மைகள் இப்படி கிடைக்க வேண்டுமென ஆதரவு கொடுக்கவில்லை. மாறாக, எங்களது நீண்டகால அரசியல் அபிலாசைகளிற்கு ஒரு தீர்வு கிட்டுவதற்காகத்தான் ஆதரவளித்தோம்.

இந்த நாட்டின் தலைவராக ஆகுவதற்கு பலர் இப்பொழுது முன்வந்துள்ளனர். அவர்கள் இலங்கையை நாங்கள் ஒரு நாடாக வைத்திருக்கவும், இலங்கையின் இறைமையை பாதுகாப்போம் என்றும் பெரும்பான்மை மக்களின் வாக்குகளை பெறும் பேச்சுக்களில் ஈடுபடுகின்றனர்.

இன்று ஜனாதிபதி வேட்பாளராக அல்ல, பிரதமராக அல்லாமல், கட்சி தலைவராக, எங்கள் மக்களின் பிரச்சனை தொடர்பாக எங்கள் கட்சியின் நிலைப்பாடு என்ன? இது எங்களிற்கு முக்கியமானது. கடந்த நான்கு வருடங்களாக நாங்கள் உங்களிற்கு ஆதரவளித்து, புதிய அரசியலமைப்பு முயற்சியொன்றை செய்து, அதை முடிவுக்கு கொண்டு வர முடியாத நிலையில் உள்ளோம்.

அந்தரத்தில் நிற்கும் இந்த நிலையில், எமது மக்களிடம் உங்கள் கட்சி நிலைப்பாட்டை தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன் என தெரிவித்தார்.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here