மாகாணசபை தேர்தல் தொடர்பாக ஆராய 5 நீதிபதிகள் ஆயம்!

மாகாணசபை தேர்தலை முதலில் நடத்துவது குறித்து ஜனாதிபதி அபிப்பிராயம் கோரியுள்ள விடயத்தை ஆராய, ஐந்து நீதியரசர்களை கொண்ட ஆயத்தை பிரதம நீதியரசர் நியமித்துள்ளார்.

பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய, நீதிபதிகள் புவனேகா அலுவிஹரே, சிசிரா டி அப்ரூ, விஜித் மலல்கோட, மற்றும் பிரசன்ன ஜெயவர்தன ஆகியோர் இந்த குழுவில் அடங்குகின்றனர்.

2017 ஆம் ஆண்டில் மாகாண சபைகள் (திருத்தம்) சட்டம் நிறைவேற்றப்படுவதற்கு முன்னர் இருந்த விகிதாசார பிரதிநிதித்துவம்  முறையின் கீழ் தேர்தல்களை நடத்த முடியுமா என்பதை தீர்மானிக்க ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனா உயர் நீதிமன்றத்தின் கருத்தை கோரியிருந்தார்.

நீதிமன்றத்தின் கருத்து இந்த மாத இறுதிக்குள் ஜனாதிபதிக்கு அனுப்பப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here