சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் குணநலம் பெறும் நிலையம் திறப்பு!

சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் புதிதாக அமைக்கப்பட்ட குணநலம் பெறும் நிலையத்தை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இன்று வியாழக்கிழமை திறந்து வைத்துள்ளார்.

வடக்கிற்கு மூன்று நாள் விஐயம் மேற்கொண்டுள்ள பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இன்று யாழ்ப்பாணத்தில் பல்வேறு இடங்களுக்கும் சென்று பல்வேறு அபிவிருத்திப் பணிகளை ஆரம்பித்து வைத்துள்ளார்.

இதன் தொடராக தேசிய கொள்கைகள் பொருளாதார விவகாரம் மீள்குடியேற்றம் மற்றும் புனர்வாழ்வளிப்பு வட மாகாண அபிவிருத்தி மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் நிதி உதவியினால் சாவகச்சேரி ஆதார வைத்திய சாலையில் அமைக்கப்பட்ட குணநலம் பெறும் நிலையத்தை திறந்து வைத்தார்.

இந் நிகழ்வில் கல்வி இராஜாங்க அமைச்சர் விஐயகலா மகேஸ்வரன், தமிழ் தேசிய கூட்டமைப்பு எம்.பிக்கள் உள்ளிட்ட அரசியல் பிரமுகர்கள், வைத்தியர்கள், பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here