ஹொங்கொங் மக்களின் போராட்டத்துக்கு ஹிலாரி கிளின்டன் ஆதரவு

ஜனநாயகத்துக்காக பேசும் ஹெங்கொங் மக்களின் போராட்டத்துக்கு நாம் ஒற்றுமையுடன் நிற்க வேண்டும் என்று ஹிலாரி கிளின்டன் தெரிவித்துள்ளார்.

ஹெங்கொங்கில் கடந்த ஞாயிற்றுக்கிழமை ரயில் நிலையம் உட்பட பல்வேறு பகுதிகளில் அரசுக்கு எதிராகப் போராட்டக்காரர்கள் அமைதிப் பேரணி சென்றனர். பல இடங்களில் பொலிஸார் பெட்ரோல் குண்டுகள் வீசித் தாக்குதல் நடத்தியதில் போராட்டக்காரர்கள் பலத்த காயம் அடைந்தனர்.

செவ்வாய்க்கிழமை விமான நிலையங்களில் மீண்டும் போராட்டக்கார்கள் பேரணியில் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து மீண்டும் போராட்டக்காரர்களுக்கும், பொலிஸாருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து ஹெங்கொங்கில் பதற்றம் நிலவி வருகிறது.

இந்த நிலையில் ஈரான் மக்களுக்கு தனது ஆதரவை முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி வேட்பாளரும், ஜனநாயகக் கட்சியின் மூத்த உறுப்பினருமான ஹிலாரி கிளிண்டன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து ஹிலாரி கிளின்டன் தனது ட்விட்டர் பக்கத்தில்,” ஜனநாயகத்துக்காக பேசும் ஹெங்கொங் மக்களின் போராட்டத்துக்கு நாம் ஒற்றுமையுடன் நிற்க வேண்டும். அடங்குமுறையிலிருந்து விடுதலைதான் அவர்கள் பார்க்க விரும்பும் உலகம்” என்று பதிவிட்டுள்ளார்.

இங்கிலாந்தின் காலனி ஆதிக்கத்தில் இருந்து ஹெங்கொங் விடுவிக்கப்பட்ட பின்னர் கடந்த 1997ம் ஆண்டு சீனாவின் நிர்வாகப் பகுதிகளில் ஒன்றானது. சீனாவின் நேரடிக் கட்டுப்பாட்டில் இருந்தாலும், ஹெங்கொங் நாட்டுக்கென தனி நாணயம், சட்டம், அரசியலமைப்பு எல்லாம் உள்ளன.

இந்த நிலையில் சீனாவுக்கு குற்றவாளிகளைப் பரிமாற்றம் செய்வதற்கான சட்டத் திருத்த மசோதாவை நிரந்ததரமாக ரத்து செய்ய கூறியும், சீனாவின் ஆதிக்கத்துக்கு எதிராகவும் சீனாவில் போராட்டக்காரர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here