திருகோணமலை மாணவர், தாஜூதீன் கொலை உள்ளிட்ட 5 வழக்கு விசாரணையை உடன் முடிக்க சட்டமா அதிபர் திணைக்களம் அறிவுறுத்தல்!

சர்ச்சைக்குரிய 5 முக்கிய வழக்குகளின் விசாரணையை விரைவாக முடிப்பதை உறுதி செய்யும்படி, பதில் பொலிஸ்மா அதிபருக்கு கடிதமொன்றை அனுப்பியுள்ளார் சட்டமா அதிபர்.

வாசிம் தாஜூதீன் கொலை, லசந்த விக்கிரமதுங்க கொலை, திருகோணமலையில் 11 பேர் கடத்திக் கொல்லப்பட்டது, கீத் நோயர் கடத்தல், மூதூர் அக்சன் பாம் தொண்டு நிறுவனத்தின் 17 பணியாளர்கள் கொலை ஆகியவை தொடர்பில் உடன் விசாரணை முடிக்கப்படுவதை உறுதி செய்ய சட்டமா அதிபர் வலியுறுத்தியுள்ளார்.

இந்த விவகாரத்தில் அனைத்து பொலிஸ் பிரிவுகளையும் சட்டத்திற்குட்பட்டு உடனடியாக செயற்பட வலியுறுத்தப்பட்டுள்ளது.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here