திருகோணமலையில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் போராட்டம்!

வடக்கு மற்றும் கிழக்கிலுள்ள அனைத்து மாவட்டங்களையும் சேர்ந்த வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் திருகோணமலை மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கு முன்னாள் இன்று (15) கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பத்து வருட காலங்களாக போராடியும் இலங்கை அரசாங்கம் இதுவரை காலமும் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் தொடர்பில் எதுவித பதிலும் வழங்காத நிலையில் சர்வதேசமாவது நியாயமான பதிலை கூற வேண்டும் என போராட்டக்காரர்கள் வலியுறுத்தினர்.

காணாமல் போனோர் அலுவலகம் கண்துடைப்பா?, வெள்ளை வானில் கொண்டு சென்றவர்கள் எங்கே?, பக்கச் சார்பற்ற நீதிவிசாரணை வேண்டும்!, கையில் கொடுத்த எங்கள் பிள்ளைகள் எங்கே?,காணாமல்போன எமது உறவுகளுக்கு சர்வதேச விசாரணை வேண்டும்!, கடத்தப்பட்ட எமது உறவுகள் எங்கே! சர்வதேசமே ஏன் ஊமையாய் இருக்கின்றாய்? போன்ற வசனங்கள் எழுதப்பட்ட பதாதைகளை ஏந்தியவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இப்போராட்டத்தில் 80 க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here