காசல்ரீ, மவுசாக்கலை நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் அதிகரித்தது!

கடந்த சில நாட்களாக பெய்த கடும் மழை காரணமாக காசல்ரீ, மவுசாக்கல நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் உயர்ந்துள்ளதாக பொறியியலாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இன்று காலை 6 மணி வரையான நிலவரப்படி காசல்ரீ நீர்த்தேக்கத்தின் நீர்மட்டம் 7 அடியாகவும், மவுச்சாக்கல நீர்த்தேக்கத்தின் நீர்மட்டம் 20 அடியாகவும் உயர்ந்துள்ளது.

கடந்த சில நாட்களிற்கு முன்னர் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் நிலவிய வறட்சி காரணமாக, இரண்டு நீர்த்தேக்கங்களின் நீர் மட்டமும் 20 வீதம் வரை குறைந்திருந்தது.

இந்த நீர்த்தேக்கங்களில் சேமிக்கப்படும் நீரின் அளவு அதிகரிப்பதன் மூலம் லக்சபான, நவ லக்சபான, பொல்பிட்டிய, விமலசுரேந்திர நீர் மின் உற்பத்தி நிலையங்களின் உற்பத்தி திறனை அதிகரித்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மவுசாக்கல நீர்த்தேக்கத்தின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கடந்த சில நாட்களாக பெய்த கடும் மழையால், மோகினி, நல்லதண்ணி, காட்மோர் நீர் வீழ்ச்சிகளில் அதிக நீர் வெளியேறி வருகிறது.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here