வடக்கு புகையிரத மார்க்கம் சூரிய மின்சக்தியில் இயங்கும்!

வடக்கு புகையிரத பாதையிலுள்ள புகையிரத நிலையங்கள் அனைத்தும் இந்த வாரத்திலிருந்து சூரிய சக்தியில் இயங்கும் என புகையிரத தினைக்கள பொது முகாமையாளர் டிலந்த பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

வடக்கு மார்க்கத்திலுள்ள புகையிரத நிலைய கூரைகளில் இலங்கை மின்சாரசபையின் மூலம் சூரிய மின்சக்திக்கான தகடுகள் பொருத்தப்படும்.

இந்த நிலையங்களின் மின்சார கட்டணத்தை இலங்கை மின்சார சபை எட்டு வருடங்களிற்கு செலுத்தும்.

நாட்டிலுள்ள ஏனைய புகையிரத மார்க்கங்களையும் எதிர்காலத்தில் சூரிய மின்சக்தியில் இயங்க வைக்க திட்டமிட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here