இந்திய பொறியியலாளர் தவறி விழுந்து உயிரிழந்தார்!

இந்திய பொறியாளர் ஒருவர் இலங்கையில் தவறி விழுந்து உயிரிழந்துள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

பலியானவர் பெங்களூரில் வசிக்கும் 55 வயதான வி.ராமையா ரெட்டப்பா என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

லோகல் ஓயா உயிர் மின் உற்பத்தி நிலையத்தின் 20 அடி உயரமான கட்டிடத்தில் இருந்து விழுந்துள்ளார். விசையாழியை சரிசெய்யும்போது தவறி விழுந்ததாக நம்பப்படுகிறது.

மஹியாங்கன மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

பிரேத பரிசோதனையைத் தொடர்ந்து உடல் அவரது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட உள்ளது.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here