அஜித்தை இயக்கும் பிரபுதேவா?

0

போக்கிரி படத்தை இயக்கி ஹிட் கொடுத்த பிரபுதேவா அடுத்ததாக அஜித்தை இயக்க திட்டமிட்டுள்ளார். இந்த படத்திலும் அஜித்துக்கு ஜோடியாக நயன்தாராவே நடிப்பார் என்று கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தமிழ், தெலுங்கு, இந்தி படங்களில் நடிப்பு மற்றும் இயக்கத்திலும் பிசியாக உள்ளார் பிரபுதேவா. நடிகர் அஜித் இயக்குனர் சிவாவும் தற்போது நான்காவது முறையாக விஸ்வாசம் படத்தில் இணைந்துள்ளனர்.

இந்த படத்தை அடுத்து பிரபுதேவா இயக்கத்தில் நடிக்க உள்ளதாக தெரிகிறது. இது தொடர்பாக அஜித்தை அடிக்கடி பிரபுதேவா சந்தித்து வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. விஸ்வாசம் பட வேலைகள் முடியும் முன்னரே அஜீத் – பிரபுதேவா கூட்டணி குறித்த தகவல் வெளியாகலாம் என்கிற தகவல் அடிபடுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here