நியூசிலாந்து பின்வரிசையை சுருட்டிய லக்மல்: 249 ஓட்டங்களிற்கு ஆட்டமிழந்தது

காலி டெஸ்டில் நியூசிலாந்து தனது முதல் இன்னிங்சில் 249 ஓட்டங்களிற்கு சகல விக்கெட்டுக்களையும் இழந்தது.

நேற்றைய நாள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 203 என நல்ல நிலையில் இருந்த நியூசிலாந்து, இன்று காலையில் முதல் செசனிலேயே 249 ஓட்டங்களிற்கு அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்தது.

நியூசிலாந்து பின்வரிசையை மொத்தமாக காலி செய்தார் சுரங்க லக்மல். இன்று வீழ்த்தப்பட்ட விக்கெட்டுக்களில் நான்கை அவர் கைப்பற்றினார். ரிம் சௌதி ரன் அவுட் ஆனார்.  15.2 ஓவர்கள் வீசி, 5 ஓட்டமற்ற ஓவர்களுடன் 29 ஓட்டங்களிற்கு 4 விக்கெட்டை வீழ்த்தினார் லக்மல். 30 ஓவர்கள் 3 ஓட்டமற்ற ஓவர்கள் 80 ஓட்டங்களிற்கு 5 விக்கெட் கைப்பற்றினார் அகில தனஞ்ஜெய.

நியூசிலாந்து தரப்பில் ரெய்லர் 86 ஓட்டங்களை பெற்றார்.

முதல் இன்னிங்சை ஆடி வரும் இலங்கை 15 ஓவர்களில் 43 ஓட்டங்களிற்கு 1 விக்கெட்டை இழந்துள்ளது. தொடக்க வீரராக இறக்கப்பட்ட லஹிரு திரிமன்ன 10 ஓட்டங்களுடன் வீழ்ந்தார். கருணாரத்ன 24, மென்டிஸ் 9 ஓட்டங்களுடன் களத்தில் உள்ளனர்.

இன்று காலையில் வேகப்பந்து வீச்சிற்கு பிட்ச் நன்றாக ஒத்துழைத்தது. இதை லக்மல் நன்றாக பயன்படுத்தினார். எனினும், நியூசிலாந்து வேகப்பந்து வீச்சை இலங்கை வீரர்கள் இதுவரை நன்றாக சமாளித்து ஆடினர்.

சுழற்பந்துவீச்சாளர் அஜாஸ் பட்டேலிடமே திரிமன்ன வீழ்ந்தார்.

 

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here