புனரமைக்கப்பட்ட மயிலிட்டி துறைமுகம் மக்களிடம் கையளிக்கப்பட்டது!

மிக நீண்டகாலத்தின் பின் புனரமைப்பு செய்யப்பட்டுள்ள யாழ்.மயிலிட்டி துறைமுகம் இன்று காலை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவினால் பொதுமக்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

சுமார் 30 வருடங்கள் உயர்பாதுகாப்பு வலயத்திற்குள் முடக்கப்பட்டிருந்த மயிலிட்டி துறைமுகம் அண்மையில் விடுவிக்கப்பபட்டதுடன், மக்களின் நீண்டகால கோரிக்கையான துறைமுக அபிவிருத்தி தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டது.

இந்நிலையில், சுமார் 150 மில்லியன் ரூபாய் செலவில் மயிலிட்டி துறைமுகத்தின் புனரமைப்பு பணிகளை 2018ம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 22ம் திகதி ஐனாதிபதி மைத்திரிபால சிறிசேனா தலமையில் ஆரம்பிக்கப்பட்டது.

இந்த புனரமைப்பு பணிகளின் முதல் கட்டம் நிறைவுக்கு வந்துள்ள நிலையில் மீன்பிடி வலை தயாரிக்கும் நிலையம், சனசமூக நிலையம், எரிபொருள் நிரப்பு நிலையம் ஆகியற்றை திறந்து வைத்த பிரதமர், துறைமுக புனரமைப்பு நினைவு கல்லினையும் இன்று காலைதிறந்து வைத்தார்.

இந்நிகழ்வில், வடக்கு ஆளுனர், தமிழ்தேசிய கூட்டமைப்பின் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள், பொதுமக்கள், பிரதேசசபை உறுப்பினர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டனர். பல்வேறு இடங்களில் இருந்தும் கூட்டத்திற்கு ஆட்கள் அழைத்து வரப்பட்டிருந்தனர்.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here