தடுப்பு காவலில் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய கஞ்சிபான: உயர்மட்ட பொலிஸ் விசாரணை!

போதைப்பொருள் கடத்தல் தாதாவான கஞ்சிபான இம்ரான் நாடு கடத்தப்பட்டு, தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ள நிலையில், கேக் வெட்டி தனது பிறந்தநாளை கொண்டாடிய அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸ் அதிகாரிகளுடனே அவர் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடியுள்ளார். இது குறித்த வீடியோ காட்சிகள் பொலிசாருக்கு கிடைத்துள்ளன.

கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவில் உள்ள இரண்டு சப் இன்ஸ்பெக்டர்கள், கஞ்சிபானவின் பிறந்தநாள் கொண்டாட்டத்தை அனுமதித்ததாக நம்பப்படுகிறது. கஞ்சிபானவின் தந்தையாரே, விளக்கமறியலில் உள்ள மகனிற்கு கேக் கொண்டு சென்று கொடுத்துள்ளார்.

இது குறித்து பொலிஸ் உயர்மட்ட விசாரணைகள் நடந்து வருகிறது. கொழும்பு டிஐஜி சம்பிக சிறிவர்த்தனவின் மேற்பார்வையில், மவுண்ட் லவனியா பிரிவு பொலிஸ் பொறுப்பதிகாரி முடித புஸ்ஸெல்ல விசாரணைகளை மேற்கொண்டுள்ளார்.

மேற்படி இரண்டு சப் இன்ஸ்பெக்டர்களுடன் கஞ்சிபான மகிழ்ச்சியாக, சாதாரணமாக உரையாடும் வீடியோ காட்சிகளும் விசாரணையாளர்களிற்கு கிடைத்துள்ளது.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here