குருநாகல் வைத்தியசாலை பதில் பணிப்பாளர் பொலிசில் முறைப்பாடு!

குருநாகல் பொது வைத்தயசாலையின் துணைப் பணிப்பாளர் சந்தன கண்டங்கமுவ, தனது உயிருக்கு அச்சுறுத்தல் என பொலிஸ் நிலையத்தில் நேற்று (14) முறைப்பாடு செய்துள்ளார். வைத்தியர் ஷாஃபி சிஹாப்தீன் வழக்கை விசாரித்ததைத் தொடர்ந்து தனது உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதால் பொலிஸ் பாதுகாப்பு வழங்குமாறு அவர் கோரியுள்ளார்.

ஷாஃபி விவகாரத்தை விசாரணை நடத்தி வரும் குற்றப் புலனாய்வு அதிகாரியை அச்சுறுத்தியதாக, துணைப் பணிப்பாளர் சந்தன கண்டங்கமுவ தொடர்பாக நீதிமன்றத்தில் ஏற்கனவே முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த நிலையிலேயே, சந்தன கண்டங்கமுவ பொலிசில் முறைப்பாடு செய்துள்ளார்.

சந்தேகத்திற்கிடமான பல நபர்கள் அவரது வீட்டின் அருகே தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும், மோட்டார் சைக்கிள்கள் அவரைப் பின்தொடர்ந்து வருவதாகவும் அவரது முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார்.

அவரது உயிருக்கு அச்சுறுத்தலாக அமைந்திருப்பதாகவும், எனவே அவர் தனது கடமைகளை எந்தவித இடையூறும் இல்லாமல் செய்ய ஏதுவாக பொலிஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும் குறிப்பிட்டுள்ளார்.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here