கள்ள மரங்களுடன் அநாதரவாக நின்ற வாகனம்!

இன்று (15) அதிகாலை வவுனியா சாந்தசோலை சந்திக்கருகாமையில் முதிரை குற்றிகளை ஏற்றிசென்ற கப் ரக வாகனம் ஒன்று விபத்திற்குள்ளாகியுள்ளது. குறித்த வாகனம் ஓமந்தை பகுதியில் இருந்து வவுனியா நோக்கி முதிரை மரங்களுடன் சென்றுகொண்டிருந்தபோதே விபத்திற்குள்ளாகியது.

விபத்தையடுத்து, வாகனத்தை அங்கிருந்து நகர்த்த முடியாத நிலையில் அதன் சாரதி தப்பிச்சென்றுள்ளார். வாகனம் முதிரை குற்றிகளுடன் தனிமையில் நின்றதையடுத்து, சந்தேகமைடந்த அப்பகுதி மக்கள் பொலிசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

சம்பவ இடத்திற்கு விரைந்த வவுனியா பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதுடன் குறித்த மரங்கள் அனுமதி இன்றி கடத்தபட்டுள்ளதாகவும் தெரிவித்தனர்.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here