மதுபோதையில் விபத்துக்களை ஏற்படுத்திய சாரதி: காருக்கே தீ வைத்த திருகோணமலை மக்கள்!

திருகோணமலை அலஸ்தோட்டம் பகுதியில் மதுபோதையில் காரை செலுத்திய சாரதியொருவர் விபத்தை ஏற்படுத்தியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த பிரதேசவாசிகள் காருக்கு தீவைத்துள்ளனர்.

இந்த பரபரப்பு சம்பவம் நேற்று (14) இரவு 7.30 மணியளவில் இடம்பெற்றது.

மது போதையில் காரை செலுத்தி வந்த சிங்கள சாரதி கட்டுப்பாட்டை இழந்து விபத்தை ஏற்படுத்தியுள்ளார்.

மோட்டார் சைக்கிள் ஒன்றுடன் மோதி, முச்சக்கர வண்டியில் மோதி, அருகிலுள்ள கடையொன்றுக்குள்ளும் புகுந்தது. இதில் ஐவர் காயமடைந்தனர். சிறு குழந்தை, மூதாட்டி ஆகியோரும் காயமடைந்தவர்களில் உள்ளடங்குகின்றனர்.

இதனால் அந்த பகுதியில் பதற்றம் ஏற்பட்டது. ஆத்திரமடைந்த பிரதேசவாசிகள், காருக்கு தீ வைத்தனர்.

சம்பவ இடத்திற்கு வந்த பொலிசார் நிலைமையை கட்டுப்படுத்தினர். தீயணைப்பு பிரிவினர் தீயை அணைப்பதற்குள், கார் பெருமளவில் சேதமடைந்துள்ளது.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here