தேர்தல்கால சுலோகத்துடன் புறப்பட்டார் சுமந்திரன்!

தமிழ் தேசிய கூட்டமைப்பிலிருந்து நாங்கள் யாரையும் விலகிப் போகுமாறு கூறவில்லை. விலகிப் போகிறவர்களை நாங்கள் பிடித்து வைத்து கட்டி வைக்கவும் முடியாது. இருக்கிற பலம்குறைந்தால் உம்மிடமுள்ள பலம் பாதிப்படையும் என்றும் தெரிவித்துள்ளார் தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன்.

தொண்டைமனாறு கலைவாணி சனசக நிலையத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள சிறுவர் பூங்கா திறப்புவிழா நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே இதனை தெரிவித்தார்.

எங்களுடைய அரசியல் ஒற்றுமைக்கு நிகரான அரசியல் ஒற்றுமை மற்ற சமூகங்களில் இல்லை. சடக்கு கிழக்கிலிருந்து நாடாளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்ட 18 பிரதிநிதிகளில் 16 பேர் கூட்டமைப்பை சேர்ந்தவர்கள். அதைவிட கூடுதலான ஒற்றுமையை நீங்கள் வேறு எங்கும் பார்க்க முடியாது. ஆனால் அதில் 2 பேர் தற்போது விலகி நிற்கிறார்கள். என்றாலும் 14பேர் ஒன்றாக நாங்கள் நிற்கிறோம்.

விக்னேஸ்வரன், கஜேந்திரகுமார், சுரேஷ் பிரேமச்சந்திரனை நாங்கள் விலக்கவில்லை. ஒற்றுமையில்லையென சொல்லிக் கொண்டிருப்பவர்கள் எங்களிடமிருந்து விலகிப் போனவர்கள்தான். அவர்கள் ஒருவரையும் நாங்கள் விலகிப் போக சொல்லவில்லை.

எங்கள் ஒற்றுமையில் குளறுபடி நடந்தால் எங்கள் பலம் பாதிப்படையும் என்றார்.

எனினும், கடந்த வடமாகாணசபை நிர்வாகத்தை குழப்பத்தில் ஆழ்த்தி, அப்போதைய முதலமைச்சரை கட்சியிலிருந்தும், நிர்வாகத்திலிருந்தும் வெளியேற்ற சுமந்திரனின் அணியினரே தீவிரமாக ஈடுபட்டனர். விக்னேஸ்வரனை கட்சியை விட்டு நீக்க வேண்டுமென சுமந்திரன் பகிரங்கமாகவே தெரிவித்திருந்ததும் குறிப்பிடத்தக்கது. எனினும், தேர்தல் நெருங்கும் நிலையில் வழக்கம்போல ஒற்றுமை சுலோகத்தை கூட்டமைப்பினர் முன்வைக்க ஆரம்பித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here