சிறிதரன் தனக்குரிய வேலையை மட்டும் பார்த்தால் போதும்; பாதுகாப்பை கவனிக்க எமக்கு தெரியும்: நல்லூரில் இராணுவத்தளபதி காட்டம்!

பாதுகாப்பு படையினருக்கு பாதுகாப்பு கடமைகளை பார்க்க தெரியும். நல்லூரில் என்ன செய்ய வேண்டுமென்பது இராணுவத்தினருக்கு தெரியும். சிறிதரன் தனது வேலைகளை மட்டும் பார்த்தால் போதும்.

இப்படி காட்டமாக தெரிவித்துள்ளார் இராணுவத்தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மகேஸ் சேனநாயக்க.

இன்று நல்லூருக்கு விஜயம் மேற்கொண்ட இராணுவத்தளபதி, வழிபாடுகளில் ஈடுபட்டதுடன், பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்தும் ஆராய்ந்தார்.

நல்லூர் ஆலயத்தில் இராணுவத்தின் பாதுகாப்பு கெடுபிடிகளை குறைக்க வேண்டுமென நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் உள்ளிட்ட சில அரசியல் பிரமுகர்கள் வலியுறுத்தியிருந்தனர்.

இன்று ஆலய வளாகத்தில் செய்தியாளர்கள் மத்தியில் பேசிய இராணுவத்தளபதி-

“நாட்டின் பாதுகாப்பு ஏற்பாடுகளை கவனிக்க இராணுவத்தினருக்கு தெரியும். யாரும் அது குறித்து இராணுவத்திற்கு கற்றுத்தர வேண்டியதில்லை. நல்லூரில் எப்படியான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்வதென்றும் எமக்கு தெரியும். சிறிதரன் அவருக்குரிய வேலையை மட்டும் பார்த்தால் போதும். இராணுவம் தனக்குரிய வேலையை பார்க்கும்“ என்றார்.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here