சாவகச்சேரியில் உட்கார்ந்த நிலையில் சடலத்தால் பரபரப்பு!

சாவகச்சேரியில் இன்று மாலை உட்கார்ந்த நிலையில் தூக்கிட்டபடி மர்ம நபர் ஒருவரின் சடலத்தை பொலிசார் மீட்டுள்ளனர். இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

சாவகச்சேரி -தனங்கிளப்பு வீதியில் கண்ணாடிப்பிட்டி மயானத்திற்கு அருகிலேயே இன்று (14) மாலை சடலம் மீட்கப்பட்டது.

மேலாடைகள் அகற்றப்பட்ட நிலையில், உள்ளாடையுடன் மட்டும் அவரது சடலம் காணப்பட்டது. சிறிய பூவசரம் மரமொன்றில் தூக்கிட்டு, உட்கார்ந்த நிலையில் அவரது சடலம் காணப்பட்டது.

சுமார் 50 வயது மதிக்கத்தக்க ஒருவரின் சடலமே மீட்கப்பட்டது. அவர் அந்த பகுதியை சேர்ந்தவர் அல்லவென பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றனர்.

வேறிடத்தில் இருந்து வந்து அங்கு அவர் உயிரை மாய்த்தாரா அல்லது, கொலை செய்யப்பட்டாரா என்பது தொடர்பில் பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

சறம் மற்றும் சேர்ட் ஆகியன கழற்றப்பட்ட நிலையில் உள்ளாடையுடன் சிறிய பூவரச மரத்தில் தொங்கிய நிலையில் சடலம் காணப்படுகிறது.சுமார் ஐம்பது வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவரின் சடலமே இவ்வாறு இனங்காணப்பட்டுள்ளது.புதன்கிழமை இரவு வரை சடலம் அடையாளம் காணப்படவில்லை.மேலதிக விசாரணைகளை சாவகச்சேரி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர் .

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here