அகில தனஞ்ஜெய VS ரோஸ் ரெய்லர்: நியூசிலாந்து 203/5

காலியில் இலங்கைக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்ட முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 203 ஓட்டங்களை பெற்றுள்ளது.

இன்றைய போட்டி இலங்கை- நியூசிலாந்திற்கிடையிலான போட்டியயென்பதை விட, அகில தனஞ்ஜெயவிற்கும், ரோஸ் ரெயிலரிற்குமிடையிலான போட்டியென்பதே சரி. இருவரும் தத்தமது அணிக்காக அதிகபட்ச பங்களிப்பை வழங்க, ஒரு தலைப்பட்சமான நாளாக அல்லாமல் இன்றைய முதல்நாள் முடிந்தது.

நியூசிலாந்தின் வீழ்த்தப்பட்ட 5 விக்கெட்டுக்களையும் அகில தனஞ்ஜெய கைப்பறினார். 22 ஓவர்கள் வீசி 2 ஓட்டமற்ற ஓவர்களுடன் 57 ஓட்டங்களிற்கு 5 விக்கெட்டுக்களை வீழ்த்தினார்.

நியூசிலாந்து 3 விக்கெட் இழப்பிற்கு 71 ஓட்டங்கள் என தத்தளித்தபோது, நிக்கோலசுடன் இணைந்து 100 ஓட்டங்கள் பகிர்ந்து அணியை  சவாலான நிலைமைக்கு அழைத்து வந்துள்ளார் ரோஸ் ரெய்லர். ஆட்டமிழக்காமல் 86 ஓட்டங்களுடன் களத்தில் உள்ளார்.

காலி மைதானத்தில் நடக்கும் இந்த ஆட்டத்தில் நாணயச்சுழற்சியில் வென்ற நியூசிலாந்து, முதலில் துடுப்பாட்டத்தை தெரிவு செய்தது.

முதல் விக்கெட்டிற்கு ரவல்- ரொம் லதம் 64 ஓட்டங்களை பகிர்ந்தனர். முதல் விக்கெட்டாக லதம் 30 ஓட்டங்களுடன் அகில தனஞ்ஜெயவின் பந்துவீச்சில் டிக்வெலவிடம் பிடி கொடுத்து ஆட்டமிழந்தார்.

அடுத்து களமிறங்கிய அணித்தலைவர் கேன் வில்லியம்சன் டக் அவுட்டானார். தனஞ்ஜெய பந்துவீச்சில் கருணாரத்னவிடம் பிடிகொடுத்தார். 64 ஓட்டங்களிற்கு 2 விக்கெட் என நியூசிலாந்து நெருக்கடி கண்டது.

அணியின் ஓட்ட எண்ணிக்கை 71 ஆக இருந்த போது, 3வது விக்கெட்டான ரவல் வீழ்ந்தார். 33 ஓட்டங்களுடன் தனஞ்ஜெய பந்துவீச்சில் தனஞ்ஜெய டிசில்வாவிடம் பிடிகொடுத்தார்.

4வது விக்கெட்டிற்கு ரெய்லர்- நிக்கோலஸ் இணைந்து 100 ஓட்டங்கள் சேர்த்தனர். நிக்கோலஸ் 42 ஓட்டங்களுடன் வீழ்ந்தார். அடுத்து வந்த வோல்ட்லிங் 1 ஓட்டத்துடன் பெவிலியன் திரும்பினார்.

நாள் முடிவில் நியூசிலாந்து 203 ஓட்டங்களிற்கு 5 விக்கெட் இழப்பு என முடித்துக் கொண்டது.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here