முஸ்லிம் குடியிருப்புக்கு மத்தியில்அடையாளத்தை இழக்கும் புணாணை ஸ்ரீ விநாயகர் ஆலயம் புனரமைக்கப்படுமா?

மட்டக்களப்பு மாவட்டத்தின் வெலிக்கந்தை எல்லைப் பகுதிக்கு அண்மித்து காணப்படும் புணாணை ஸ்ரீ விநாயகர் ஆலயம் புனரமைக்கப்படாத நிலையில் காணப்படுவதாக மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

மட்டக்களப்பு – கொழும்பு பிரதான வீதியில் இலுக்குப்புல் குளம், ஜெயந்தியாய புணானை கிழக்கு எனும் விலாசத்தை கொண்டு ஸ்ரீ விநாயகர் ஆலயம் அமைந்துள்ளது.

கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலக பிரிவின் நிர்வாக அலகின் கீழே கண்காணிக்கப்படுகிறது. இவ் ஆலயம் அமைந்துள்ள பகுதிகள் கோறளைப்பற்று வடக்கு வாகரை பிரிவினுள் அடங்கும் போது ஏன் இவ்வாலயம் அமைந்துள்ள பகுதி நிலத்தொடர்பற்ற வகையில் உள்ள கோறளைப்பற்று மத்தி பிரிவில் நிர்வகிக்கப்பட வேண்டும் என்ற கேள்வி அனைவரது மத்தியிலும் எழுகின்றது.

இவ்வாலயம் அமைந்துள்ள இடத்தில் இருந்து சுமார் ஒரு கிலோமீற்றர் தூரத்தில் அதே பக்கத்தில் புணாணை புகையிரத நிலையத்திற்கு எதிரே உள்ள வீரையடி பிள்ளையார் ஆலயம் வாகரை பிரதேசத்தில் அடங்கும் போது ஏன் இவ்வாலயம் கோறளைப்பற்று மத்தி பிரிவில் நிர்வகிக்க பட வேண்டும் என மக்கள் கேள்வி எழுப்புகின்றனர்?

இவ் விடயம் தொடர்பாக நடவடிக்கை எடுத்து கோறளைப்பற்று வடக்கு வாகரை பிரதேச செயலகப் பிரிவினுள் இவ்வாலயத்தை கொண்டு வர அனைவரும் முன்வர வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

இந்துக்களின் தனித்துவத்தை நிலை நிறுத்தி தமிழ் மக்கள் வாழ்ந்து வந்த இவ்வாலயம் அமைந்துள்ள இப் பிரதேசம் கலாசார பாரம்பரிய வழிபாட்டு முறைகளை பேணிக்காத்து வந்தது. ஆனால் இவ்வாலயம் இன்று எவருமே சென்று வழிபாட்டினை செய்ய முடியாத அளவுக்கு உள்ளது. இவ்வாயலத்தினை அண்மித்து முஸ்லிம் சமூகத்தினர் வாழ்ந்து வருகின்றனர்.

இவ்வாலயம் தற்போது புதிதாக மூலஸ்தானம் கட்டப்பட்டு முடிவுறாத நிலையில் உள்ளது. ஆனால் இவ்வாலயத்தினை முற்று முழுதாக புனரமைக்க யாரும் இதுவரை முன்வரவில்லை. எனவே அனைவரும் முன்வர வேண்டும் என பொதுமக்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

மேலும் இவ்வாலயத்தின் காணியானது திட்டமிட்டு இரண்டாகப் பிரிக்கப்பட்டு ஆலயத்தின் பின் பகுதியில் உள்ள முஸ்லிம் கிராமத்திற்ருச் செல்லும் பாதையாக உள்ளது. இதனால் வீதியின் கிழக்குப் பக்கத்தில் 1969ம் ஆண்டு அமைக்கப்பட்ட ஆலய கிணறும், மேற்குப் பக்கம் தற்போதுள்ள ஆலயமும் உள்ளது.

மேலும் இவ்வாலயம் இந்து கலாச்சார அலுவல்கள் திணைக்களத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. எனவே மதங்களுக்கு அப்பால் தமிழராய் இவ்வாலயத்தை புனரமைக்க அனைவரும் ஒன்றுபட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாலயமானது பாழடைந்த ஆலயமாக காணப்படுகின்றது.

எனவே இவ்வாலயத்தினை முற்றுமுழுதாக மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள அரசியல் வாதிகள், பொது அமைப்புக்கள், இந்து அமைப்புக்கள், இந்து ஆர்வாளர்கள் அனைவரும் ஒன்றிணைந்து புனரமைப்பு செய்து கும்பாபிஷேகத்தினை நடாத்த முன்வர வேண்டும்.

இவ்வாலயமானது இவ்வீதியால் நெடுந்தூர பயணம் செய்யும் பயணிகள் வழிபட்டு தங்களுடைய பயணத்தின் பாதுகாப்பு கருதி வணங்கி சென்ற ஆலயமாகும். இப்போது இங்கு யாரும் வழிபாடதே நிலையே காணப்படுகின்றது.

எனவே புணாணை ஸ்ரீ விநாயகர் ஆலயதினை புனரமைப்பு செய்து இந்து மக்களின் பாரம்பரிய இடங்களை பாதுகாக்க அனைவரும் முன்வருமாறு பொதுமக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here