கண்டி கட்டுக்கலை விநாயகர் ஆலயத்தில் கோட்டாபய வழிபாடு!

பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ச நாடளாவிய ரீதியிலுள்ள மதஸ்தலங்களுக்குச் சென்று சமய வழிபாடுகளில் ஈடுபட்டு வருகின்றார்.

இன்று கண்டிக்கு விஜயம் செய்த அவர் கட்டுக்கலை செல்வ விநாயகர் ஆயலத்திற்குச் சென்று வழிபாடுகளில் ஈடுபட்டார். எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ச உள்ளிட்ட கூட்டு எதிர்க்கட்சியின் உறுப்பினர்களும் இந்த வழிபாடுகளில் கலந்து கொண்டிருந்தனர். அதனைத் தொடர்ந்து மீரா மக்கம் முஸ்லிம் பள்ளிவாயலுக்கும் சென்றிருந்தார்.

அங்கு மத வழிபாடுகளை நிறைவு செய்ததன் பின்னர் மஹிந்த ராஜபக்சஷ, கோட்டாபய ராஜபக்ச மற்றும் பசில் ராஜபக்ச உள்ளிட்ட கூட்டு எதிர்க்கட்சியின் உறுப்பினர்கள் மல்வத்து மகாநாயக்க திப்பட்டுவாவே ஸ்ரீ சுமங்கல தேரரை சந்தித்து ஆசி பெற்றனர்.

அதனைத் தொடர்ந்து அஸ்கிரிய பீடத்திற்குச் சென்ற அவர்கள் மகாநாயக்க வரகாகொட ஸ்ரீ ஞானரத்த தேரரிரடமும் ஆசி பெற்றுக் கொண்டனர்.

மத வழிபாடுகளைத் தொடர்ந்து தலதா மாளிகை வளாகத்தில் கூடியிருந்த இளைஞர் யுவதிகளிடம் அவர்களின் வேலை வாய்ப்புக்கள் குறித்து கலந்துரையாடிய கோட்டாபய, பெருந்தோட்டத் தொழிலாளர்களின் வாழ்வாதாரப் பிரச்சினைகள் குறித்தும் கேட்டறிந்த கொண்டார்.

இதேவேளை கதிர்காமத்திற்கு சென்று மத வழிபாடுகளில் ஈடுபடவுள்ளார்.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here