தனஞ்ஜெய 3: நியூசிலாந்து திணறல் தொடக்கம்!

நியூசிலாந்துடனான முதலாவது டெஸ்ட் போட்டியில் இலங்கை நல்ல தொடக்கத்தை பெற்றுள்ளது. நியூசிலாந்தின் ஆரம்ப விக்கெட்டுக்களை விரைவாக வீழ்த்தி, நியூசிலாந்தை தொடர்ந்து நெருக்கடிக்குள் வைத்துள்ளது இலங்கை.

உலக சம்பியன்ஷிப் டெஸ்ட் தொடரின் முதல் ஆட்டமான இலங்கை- நியூசிலாந்து டெஸ்ட் தொடர் இன்று ஆரம்பித்தது.

காலி மைதானத்தில் நடக்கும் இந்த ஆட்டத்தில் நாணயச்சுழற்சியில் வென்ற நியூசிலாந்து, முதலில் துடுப்பாட்டத்தை தெரிவு செய்தது.

முதல் விக்கெட்டிற்கு ரவல்- ரொம் லதம் 64 ஓட்டங்களை பகிர்ந்தனர். முதல் விக்கெட்டாக லதம் 30 ஓட்டங்களுடன் அகில தனஞ்ஜெயவின் பந்துவீச்சில் டிக்வெலவிடம் பிடி கொடுத்து ஆட்டமிழந்தார்.

அடுத்து களமிறங்கிய அணித்தலைவர் கேன் வில்லியம்சன் டக் அவுட்டானார். தனஞ்ஜெய பந்துவீச்சில் கருணாரத்னவிடம் பிடிகொடுத்தார். 64 ஓட்டங்களிற்கு 2 விக்கெட் என நியூசிலாந்து நெருக்கடி கண்டது.

அணியின் ஓட்ட எண்ணிக்கை 71 ஆக இருந்த போது, 3வது விக்கெட்டான ரவல் வீழ்ந்தார். 33 ஓட்டங்களுடன் தனஞ்ஜெய பந்துவீச்சில் தனஞ்ஜெய டிசில்வாவிடம் பிடிகொடுத்தார்.

தற்போது ரோஸ் ரெய்லர், நிக்கோலஸ் இணைந்து அணியின் ஓட்ட எண்ணிக்கையை 113 வரை கொண்டு வந்துள்ளனர். 44 ஓவர்கள் முடிவில் 113 ஓட்டங்கள் 3 விக்கெட் இழப்பு என நியூசிலாந்து ஆடி வருகிறது.

அகில தனஞ்ஜெய 17 ஓவர்கள் வீசி 43 ஓட்டங்களிற்கு 3 விக்கெட் வீழ்த்தினார்.

அணி விபரம்-

இலங்கை- திமுத் கருணாரத்ன (தலைவர்), லஹிரு திரிமன்ன, குசல் மென்டிஸ், அஞ்சலோ மத்யூஸ், குசல் பெரேரா, நிரோசன் டிக்வெல, தனஞ்ஜெய டி சில்வா, அகில தனஞ்ஜெய, லசித் எம்புல்தெனிய, சுரங்க லக்மல், லஹிரு குமார.

நியூசிலாந்து- ரவல், ரொம் லதம், கேன் வில்லியம்சன் (தலைவர்), ரோஸ் ரெய்லர், நிக்கோலஸ், வோல்டிங், சண்டனர், சௌத்தி, சோமர்விலே, அஜாஸ் பட்டேல், ட்ரென்ட் போல்ட்.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here