செப். 13,14இல் யானைக் கணக்கெடுப்பு: ஆர்வமுள்ளவர்கள் இணையலாம்!

இலங்கையிலுள்ள யானைகள் பற்றிய கணக்கெடுப்பு எதிர்வரும் செப்டம்பர் 13,14ம் திகதிகளில் இடம்பெறவுள்ளது. இதற்காக 7,316 பணியாளர்கள் ஈடுபடுத்தப்படவுள்ளதாக வனஜீவராசிகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இலங்கையின் அனைத்து பகுதிகளையும் உள்ளடக்கிய 2,229 மையங்களில், கணக்கெடுப்பாளர்களின் தரவுகளை சேகரிப்பார்கள். யானைகளின் எண்ணிக்கை, யானைகளின் தராதரம், ஆரோக்கியம் உள்ளிட்ட பல தகவல் சேகரிக்கப்படவுள்ளது.

இறுதியாக 2011 ஓகஸ்டில் காட்டு யானைகளின் கணக்கெடுப்பு நடைபெற்றது. அதன்படி, இலங்கையில் 5,879 காட்டு யானைகள் இருந்தன. எனினும், அந்த கணக்கெடுப்பில் வடக்கு மற்றும் கிழக்கில் சில பகுதிகளில் கணக்கெடுப்பு இடம்பெறவில்லை.

பல்கலைக்கழக மாணவர்கள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மற்றும் ஆர்வமுள்ள எவரும் இந்த ஆய்வில் சேரலாம். 0112 888 585 என்ற எண்ணை தொடர்பு கொண்டு மேலதிக தகவல்களைப் பெறலாம்.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here