மஸ்கெலியவில் மீட்கப்பட்ட சடலம்!

மஸ்கெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட டீசைட் தோட்ட மல்லியப்பு பிரிவில் சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது.

விறகு வெட்டச் சென்ற ஒருவர் சடலத்தை கண்டு மஸ்கெலியா பொலிஸ் நிலையத்திற்கு அறிவித்தார். மஸ்கெலியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தலைமையிலான பொலிஸார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

சடலத்தை இதுவரை அடையாளம் காண முடியவில்லை. இதனால், ஹட்டன் நீதிவான் நீதிமன்ற நீதிபதி சம்பவ இடத்திற்கு வந்ததன் பின்னர் பிரேத பரிசோதனைக்காக சடலம் அனுப்பி வைக்கப்படும் என மஸ்கெலிய பொலிசார் தெரிவித்தனர்.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here