ஜனாதிபதி தேர்தலின் முன்னர் மாகாணசபை தேர்தல் நடத்துவதிலுள்ள நடைமுறை சிக்கல்கள்!

இந்த ஆண்டு மாகாண சபைத் தேர்தலை நடத்துவதில் நடைமுறைச் சிக்கல்கள் இருப்பதாக தேர்தல் செயலக அதிகாரி ஒருவர் எச்சரித்துள்ளார். எந்தமுறையில் தேர்தல் நடத்துவது என்பது குறித்து, உயர்நீதிமன்றம் இந்த மாத இறுதிக்குள் வழங்கும் தீர்ப்பே, இந்த விவகாரத்தை தீர்மானிக்கும் என அவர் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி தேர்தலின் முன்பாக, மாகாணசபை தேர்தலை நடத்தலாமென உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தால், தேர்தல் ஆணையம் நடைமுறை சவால்களை எதிர்கொள்ளும்.

குறுகிய காலத்தில் இரண்டு தேர்தல்கள் நடத்துவது சவாலானது என்பதற்கு அப்பால், பிரசார நடவடிக்கைகளை கட்டுப்படுத்துவதும் சிக்கலாக இருக்கும். முதலில் மாகாணசபை தேர்தல் நடைபெற்று, அடுத்து ஜனாதிபதி தேர்தல் நடைபெற்றாலும், மாகாணசபை தேர்தலின் பிரச்சார காலம் முடிந்த பின்னரும் ஜனாதிபதி தேர்தலின் பிரச்சார காலம் நீடிக்கும். இது குழப்பத்தை ஏற்படுத்தும் என அந்த அதிகாரி எச்சரித்துள்ளார்.

2017 ஆம் ஆண்டில் மாகாண சபை (திருத்தம்) சட்டம் நிறைவேற்றப்படுவதற்கு முன்னர் இருந்த விகிதாசார பிரதிநிதித்துவ முறையின் கீழ் மாகாண தேர்தல்களை நடத்த முடியுமா என்பது குறித்து உயர்நீதிமன்ற தீர்மானத்தை ஜனாதிபதி கோரியுள்ளார்.

இந்த விவகாரத்தில் இந்த மாத இறுதிக்குள் உயர்நீதிமன்றம் தனது முடிவை அறிவிக்கும்.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here