கொழும்பு மாநகரசபையின் ஸ்மார்ட் லாம்ப் திட்டத்திற்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் மனு!

கொழும்பு மாநகரசபை ஸ்மார்ட் லாம்ப் கம்ப திட்டத்திற்காக கையெழுத்திட்ட ஒப்பந்தத்திற்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. கொழும்பு மாநகர சபை உறுப்பினர் ஷர்மிளா கோனவெல நேற்று (13) இந்த மனுவை தாக்கல் செய்துள்ளார்.

கொழும்பு மாநகரசபை மற்றும் தனியார் நிறுவனம் ஒன்றிற்கிடையிலான இந்த ஒப்பந்தம் 20 ஆண்டுகள் வலிமையானது. ஒப்பந்தம் மூலம் உள்ளூர் அதிகாரசபைக்கு 3.7 பில்லியன் வரை இழப்பை ஏற்படுத்தும் என மனுவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

கம்பங்களில் நிறுவப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட சுமார் 200 சி.சி.டி.வி கமராக்களில் திரட்டப்பட்ட தரவுகளை விற்க தனியார் நிறுவனத்திடம் முழுமையான அதிகாரம் வழங்கப்பட்டதால் இந்த ஒப்பந்தம் மக்களின் தனிப்பட்ட வாழ்க்கைக்கு ஆபத்தை ஏற்படுத்தியுள்ளது என்று அவர் கூறினார்.

ஸ்மார்ட் லாம்ப் கம்பங்களில் சிசிடிவி கமராக்கள் மற்றும் மின்சார வாகனங்களுக்கு சார்ஜிங் போர்ட், வைஃபை மற்றும் புளூடூத் வசதிகள் பொருத்தப்படும் என்று ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஒப்பந்தத்தின் படி, முதல் மூன்று ஆண்டுகளுக்கு கொழும்பு மாநகரசபை திட்டத்தின் செலவுகளைச் செய்ய வேண்டும். ஆனால் திட்டத்திற்கான கேள்வி அறிவிப்புகளில் மாநகரசபை எந்த செலவையும் ஏற்க வேண்டியதில்லை என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த முரண்பாடும் மனுவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இந்த ஒப்பந்தம் தனியார் நிறுவனத்திற்கு கொழும்பு மாநகரசபையின் சில சொத்துக்களை அதன் கட்டிடங்கள் உட்பட திட்டத்திற்கு பயன்படுத்த அனுமதிக்கிறது என்றும் மனுதாரர் குறிப்பிட்டார்.

யாழ் மாநகரசபையினால் நடைமுறைப்படுத்தப்படும் ஸ்மார்ட் லாம்ப் திட்டத்தில் வெளிப்படை தன்மையிருக்கவில்லையென குற்றச்சாட்டுக்கள் எழுந்ததும், திட்டம் தொடர்பில் யாழ் மேல் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here