வள்ளிபுனத்தில் செஞ்சோலை நினைவஞ்சலி!

செஞ்சோலை படுகொலை நினைவுத்தூபி திறப்பும், அஞ்சலி நிகழ்வும் இன்று காலை வள்ளிபுனம் இடைக்கட்டு சந்தியில் இடம்பெற்றது.

2006ம் ஆண்டு இதேநாளில் செஞ்சோலை வளாகம் மீது சிறிலங்கா விமானப்படை விமானங்கள் நடத்திய தாக்குதலில் பாடசாலை மாணவிகள் உள்ளிட்ட 61 பேர் உயிரிழந்திருந்தனர். இந்த படுகொலையின் 13ம் ஆண்டு நினைவஞ்சலி இன்று அனுட்டிக்கப்பட்டு வருகிறது.

படுகொலை இடம்பெற்ற வள்ளிபுனத்திற்கு அருகிலுள்ள இடைக்கட்டு சந்தியில் இன்று நினைவஞ்சலியும், தூபி திறப்பும் இடம்பெற்றது.

செஞ்சொலை படுகொலையில் தனது இரண்டு பிள்ளைகளை பறிகொடுத்த தந்தையொருவர் பொதுச் சுடரை ஏற்றி வைத்தார். அதைத் தொடர்ந்து பொது திருவுருவப்படத்திற்கு இலங்கை தமிழ் அரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா பொதுச் சுடர் ஏற்றி வைத்தார். வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிவமோகன் மலர்மாலை அணிவித்தார்.

அதனைத் தொடர்ந்து தாக்குதலில் கொல்லப்பட்ட உறவுகளுக்கான சுடர்கள் அவர்களுடைய உறவுகளால் ஏற்றப்பட்டு மலர் மாலை அணிவிக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து இந்த மாணவர்களுடைய ஞாபகார்த்தமாக அமைக்கப்பட்ட நினைவு தூபி திரைநீக்கம் செய்து வைக்கப்பட்டது.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here