வவுனியாவில் வெள்ளை நாகத்தை பார்க குவிந்த மக்கள்!

வவுனியா தாண்டிகுளம் பகுதியில் வெள்ளைநாகம் ஒன்று வீதிக்கு வந்தமையால் அதனை பார்க மக்கள் ஒன்றுகூடிய சம்பவம் ஒன்று இன்றயதினம் காலை இடம்பெற்றுள்ளது.

சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில் இன்று காலை தாண்டிக்குளம் ஒண் மாட் உணவகத்திற்கு அருகில் வயல்வெளியில் இருந்து வெள்ளை நாகம் ஒன்று வீதிக்கு வந்துள்ளது. வீதியால் சென்ற அனைவரும் தமது வாகனங்களை நிறுத்திவிட்டு குறித்த பாம்பினை பார்வையிட குவிந்தனர்.

குறித்த பாம்பு வீதியில் நின்ற மோட்டார் சைக்கிள் ஒன்றிற்குள் சென்று ஒழிந்து கொண்டது. இதனால் அதனை வெளியில் எடுத்து விடும் நோக்குடன் உணவகத்திற்கு அருகில் உள்ள சாந்தசோலை நாகபூசணி அம்மன் ஆலயத்திற்கு குறித்த மோட்டார் சைக்கிள் கொண்டு செல்லபட்டது. அங்கு நின்ற ஒருவர் நாகபாம்பினை கையினால் பிடித்து எடுத்து ஆலயத்தில் விட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

குறித்த சம்பவத்தினால் அப்பகுதியில் சற்று நேரம் பரபரப்பு ஏற்பட்டிருந்ததுடன் ஏ9 வீதியில் சற்று நேரம் வாகன நெரிசல் ஏற்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here