நல்லூரில் பூஜை வழிபாடுகளில் ஈடுபட்ட இராணுவத்தளபதி!

யாழ்ப்பாணத்திற்கு விஐயம் மேற்கொண்டுள்ள இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மகேஸ் சேனநாயக்க, வரலாற்றுப் பிரசித்தி பெற்ற நல்லூர்க் கந்தன் ஆலயத்திற்குச் சென்று பூஜை வழிபாடுகளில் ஈடுபட்டதுடன் நல்லூர் கந்தன் ஆலய உற்வசகால பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடர்பிலும் ஆராய்ந்துள்ளார்.

இலங்கை இரானுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மகேஸ் சேனாநாயக்க, யாழ்ப்பாணத்திற்கு இன்று விஐயமொன்றை மேற்கொண்டுள்ளார். யாழ் வந்துள்ள இராணுவத்தளபதி வரலாற்றுப் பிரசித்தி பெற்ற நல்லூர்க் கந்தன் ஆலயத்திற்கு இன்று காலை சென்று விசேட பூiஐ வழிபாடுகளில் ஈடுபட்டுள்ளார்.

இதன் போது இரானுவத்தளபதியுடன் யாழ் மாவட்ட இராணுவத் தளபதி உள்ளிட்ட இராணுவத்தினரும் ஆலய வழிபாட்டில் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. இவ் ஆலய வழிபாடுகளில் ஈடுபட்ட இராணுவத் தளபதி ஆலயத்தின் பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடர்பிலும் ஆராய்ந்திருந்தார்.

இரானுவத் தளபதியின் நல்லூரிற்கான வருகையை முன்னிட்டு ஆலயத்தில் பலத்த பாதுகாப்புக்கள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. இதே வேளை பிரதமரின் வருகையை முன்னிட்டு தொடர்ந்தும் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டிருக்கின்றமையும் குறிப்பிடத்தக்கது.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here