
மதுபானம் அருந்திக் கொண்டிருந்த 13 வயதான சிறுவன் ஒருவனை பொலிசார் கண்டறிந்துள்ளனர். குளியாப்பிட்டிய குங்ககேதர பகுதியில் இந்த சம்பவம் நடந்தது. சிறுவனிற்கு மதுபானம் கொடுத்தவர் தலைமறைவாகி விட்டார்.
சிறுவன் மனவளர்ச்சி குன்றியவர் என்பது விசாரணைகளில் தெரிய வந்துள்ளது. சிறுவனிற்கு அவர் மதுபானம் கொடுப்பதை வாடிக்கையாக கொண்டுள்ளார். இது குறித்து பொலிசாருக்கு கிடைத்த தகவலையடுத்தே, சிறுவனை மீட்டெடுத்துள்ளனர்.
சிறுவனின் தாயார் பொலிஸ் விசாரணையில் உள்ளார்.
குளியாப்பிட்டிய, உருப்பிட்டிய பகுதியை சேர்ந்த ஆணொருவரே சிறுவனிற்கு மதுபானம் பருக கொடுத்துள்ளார். அவர் தற்போது தலைமறைவாகியுள்ளார். பொலிசாரிடம் சிறுவன் சிக்கியதிலிருந்து, அவர் வீட்டிற்கு வருவதை தவிர்த்துள்ளார். அவரை பொலிசார் தேடி வருகின்றனர்.
Loading...
