நிலம் தாழிறங்கியதில் 32 குடும்பங்களை சேர்ந்த 74 பேர் இடம்பெயர்வு

கொத்மலை பிரதேச சபைக்கு உட்பட்ட கொங்காலை தோட்டத்தில் நிலம் தாழிறங்கியதில் 32குடும்பங்களை சேர்ந்த 74 பேர் குறித்த லயன் பகுதியை விட்டு வெளியேறியுள்ளனர்.

குறித்த லயன் பகுதி நேற்று பெய்த அடைமழையால் சற்று தாழிறங்கியுள்ளது. இதனால் அப்பகுதியில் வசித்த குடும்பங்கள் அச்சத்தில் குடியிறுப்பை விட்டு வெளியேறினர்.

வெளியேறிய மக்கள் கெட்டபுலா தமிழ் மகா வித்தியாலயத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

(நீலமேகம் பிரசாந்த்)

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here