வரவு செலவு திட்ட முன்மொழிவுகளிற்கான கோப் குழு கூட்டம் மட்டக்களப்பில்!

2020ம் ஆண்டு நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ள வரவு செலவுத் திட்டத்திற்கான பொதுமக்களின் கருத்துகளை அறியும் கூட்டம் நேற்று (13) மட்டக்களப்பில் இடம்பெற்றது.

நாடாளுமன்ற பொதுக்கணக்கு குழுவின் கூட்டம் மட்டக்களப்பில் உள்ள தனியார் விடுதியொன்றில் நடைபெற்றது.நாடாளுமன்ற பொதுக்கணக்கு குழுவின் தலைவர் எம்.ஏ.சுமந்திரன் தலைமையில் நடைபெற்றது.

நாடாளுமன்ற பொதுக்கணக்கு குழுவின் உறுப்பினர்களான எம்.திலகராஜ், ஆஷூ மாரசிங்க, விஜயபால ஹெட்டியாராட்சி, இஸ்மாயில், மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் எம்.உதயகுமார் மற்றும் நாடாளுமன்ற உத்தியோகத்தர்கள், பொது அமைப்புகளின் பிரதிநிதிகள், திணைக்களங்களின் தலைவர்கள், பிரதேச செயலாளர்கள் என பலர் கலந்துகொண்டனர்.

இதன்போது மட்டக்களப்பு மாவட்டத்தில் விவசாயம், மீன்பிடி, கல்வி, கால்நடை, சுகாதாரம்,வேலைவாய்ப்பு,வாழ்வாதாரம் ஆகியனவற்றிற்கு எதிர்கால வரவு செலவு திட்டம் மூலம் முன்னெடுக்கப்படவேண்டிய திட்டங்கள் குறித்து இங்கு பல்வேறு கருத்துகள் பரிமாறப்பட்டன.

என்ரபிரைஸ் ஸ்ரீலங்கா திட்டத்தின் ஊடாக மட்டக்களப்பு மாவட்டத்தில் மேற்கொள்ளப்படும் திட்டங்கள் குறித்தும் ஆய்வுசெய்யப்பட்டதுடன் அவற்றில் உள்ள குறைபாடுகளை குறித்தும் ஆராயப்பட்டது.

இந்த கூட்டத்தின்போது வரவு செலவு திட்டத்தின்போது மக்களினால் முன்வைக்கப்படவேண்டிய நிதி அறிக்கைகள் தொடர்பில் பல்வேறு கருத்துகள் பெறப்பட்டதுடன் அவற்றினை உள்வாங்கும் நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டன.

இந்த ஆட்சிக்காலத்திலேயே வரவு செலவு திட்டத்தினை தயாரிப்பதற்காக பொதுமக்களின் கருத்துகள் பெறப்படுவதாக இங்கு கருத்து தெரிவித்த பொது அமைப்புகளினால் சுட்டிக்காட்டப்பட்டது.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here