நல்லூர் வழிபாடு… ரியோ ஐஸ்கிறீம்… சைவ பிரமுகர்களுடன் சந்திப்பு: ரணிலின் வடக்கு நிகழ்ச்சி அட்டவணை!

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் வடக்கிற்கான மூன்று நாள் விஜயம் இன்று மாலை ஆரம்பிக்கிறது.

இன்று மாலை வவுனியாவிற்கு விஜயம் செய்யும் பிரதமர், மாலை 3 மணிக்கு வவுனியா பொது வைத்தியசாலையில் சுகாதாரதுறை மேம்படுத்தல் அபிவிருத்தி திட்டத்தின் கீழ் உருவாக்கபட்ட விபத்து மற்றும் அவசரசிகிச்சை பிரிவை மக்கள் பயன்பாட்டிற்கு கையளிப்பார். உலக வங்கி நிதியுதவியில் இது அமைக்கப்பட்டது. பின்னர், நெதர்லாந்து அரசாங்கத்தின் இலகு கடன் உதவியில் அமைக்கப்படவுள்ள இருதய மற்றும் சிறுநீரக சிகிச்சை பிரிவிற்கான அடிக்கல் நாட்டுவார். இதில் சுகாதார அமைச்சர் ராஜித, வடக்கு ஆளுனர் ஆகியோரும் கலந்து கொள்கிறார்கள்.

நிகழ்வு முடிந்ததும், யாழ்ப்பாணம் வருகிறார். ஜெட்விங் ஹொட்டலில் பிரதமர் மற்றும் அமைச்சர்கள் குழாம் தங்கியிருக்கும்.

15ம் திகதி

காலை 7 மணிக்கு நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் வழிபாடுகளில் ஈடுபடுவார். பின்னர் நல்லை ஆதீன சுவாமிகளை சந்தித்து பேசுவார். அங்கு சைவ சமய தலைவர்களுடனான கலந்துரையாடலும் இடம்பெறும். சைவ மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் குறித்து இதில் விவாதிக்கப்படும்.

காலை 9.45 மணிக்கு மைலிட்டி துறைமுகம் திறக்கப்படும்.

10.20 மணிக்கு அங்கு 10 வீடுகளை பொதுமக்களிடம் கையளிப்பார்.

11 மணிக்கு திருநெல்வேலி விவசாய திணைக்கள பயிற்சி நிலையத்தில் நடைபெறும் நிகழ்வில், பொதுமக்களிற்கு விவசாய உபகரணங்கள் வழங்குவார்.

மதியம் 2 மணிக்கு குருநகர் மீன்பிடி துறைமுகத்திற்கான அடிக்கல் நாட்டப்படும்.

3.15 மணிக்கு சாவகச்சேரி வைத்தியசாலையின் இயன் சிகிச்சை பிரிவு திறப்பு

4.15 மணிக்கு யாழ் நாகவிகாரையில் வழிபாடுகளில் ஈடுபடுவார்.

பின்னர் பிரதமரின் விருப்பத்திற்குரிய யாழ் ஐஸ்கிறீம் கடை விஜயமும் இடம்பெறலாம்.

16ம் திகதி

காலை 9 மணிக்கு இந்தியாவினால் யாழில் அமைக்கப்படும் கலாசார நிலைய கட்டுமான பணிகளை பார்வையிடுவார்.

10 மணிக்கு யாழ் மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் இடம்பெறும்.

12.30 மணிக்கு வடமராட்சி உடுப்பிட்டியில் 10 வீடுகளை பொதுமக்களிடம் கையளிப்பார்.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here