கோட்டா மட்டுமல்ல நீங்களும் மன்னிப்பு கோர வேண்டும்: ரணிலின் முகத்திலறைந்த லசந்த மகள்!

முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ மட்டுமல்லாமல், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என்று பத்திரிகையாளர் லசந்த விக்ரமதுங்காவின் மகள் அகிம்சா விக்ரமதுங்க தெரிவித்துள்ளார்.

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எழுதிய கடிதத்தில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதி வேட்பாளராக கோட்டாபய பெயரிடப்பட்ட பின்னர், நேற்று நடந்த நிகழ்வொன்றில் உரையாற்றிய பிரதமர், பதவியிலிருந்தபோது செய்த குற்றங்களிற்கு கோட்டாபய மன்னிப்பு கோருவாரா என கேள்வியெழுப்பியிருந்தார். அதில் லசந்த கொலையையும் சுட்டிக்காட்டியிருந்தார்.

அகிம்சாவின் கடிதத்தில்,

தனது தந்தையின் கொலையை அரசியலுக்கெ பயன்படுத்துகிறார்கள், உண்மையான நீதியை பெற்றுத்தருவது யாருடையதும் நோக்கமல்ல என்று குறிப்பிட்டுள்ளார். ஆட்சிக்கு வருவதற்கு முன்னர் லசந்த கொலைக்கு நீதியை பெற்றுத்தருவதாக குறிப்பிட்டு வந்த ரணில், ஆட்சிக்கு வந்ததும் கோட்டாபயவை பாதுகாத்தார் என அகிம்சா குற்றம்சாட்டியுள்ளார்.

பிரதமர் ரணில் விக்ரமசிங்க இப்போது ஜனாதிபதித் தேர்தலுக்காக தனது தந்தையின் படுகொலையை நினைவு கூரக்கூடும் என்றும் அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. பிரதம மந்திரியின் முக்கிய பிரதானியான அமைச்சர் சாகலா ரத்நாயக்க மற்றும் பிரதமரின் மற்ற நெருங்கிய நண்பர்களும் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவுடன் நெருக்கமாக பணியாற்றி வருவதாகவும் அவர் கூறுகிறார்.

இப்போது தனக்கு இருக்கும் ஒரே நம்பிக்கை, நீதிக்கான உண்மையான ராஜபக்ஷ எதிர்ப்பு வேட்பாளராக நிற்பதுதான் என்று கூறியுள்ளார்.

தனது தந்தையின் கொலையுடன் சம்பந்தப்படாத ஒருவரை வேட்பாளராக நியமிக்கும்படியும் கோரிக்கை விடுத்துள்ளார்.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here