பேச்சுவார்த்தையிலிருந்து விலகி விட்டு ஆட்லறி அடிப்பதா?: சுமந்திரன்!

அரசுடனான பேச்சுவார்த்தையிலிருந்து எம்மை விலகும்படி பலர் கேட்கிறார்கள். பேச்சிலிருந்து விலகி விட்டு, நாம் ஆட்லறி அடிப்பதா?

இப்படி கேள்வியெழுப்பியுள்ளார் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன்.

இன்று (13) அம்பாறை திருக்கோவில் பகுதியில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஆதரவாளர்கள் மத்தியில் நடந்த பிரசாரக்கூட்டத்தில் உரையாற்றும்போதே இதனை தெரிவித்தார்.

தமிழீழ விடுதலைப்புலிகள் பேச்சுவார்த்தைகளிற்கு சென்றபோது, போர்நிறுத்தத்தை அறிவித்து விட்டுத்தான் சென்றார்கள். போர் நிறுத்தம் முறிந்தால் உடனே போர் வெடிக்கும். அவர்களிடம் மாற்று வழியொன்று இருந்தது. அவர்கள் ஆயுதங்களுடன் இருந்தார்கள்.

யுத்தத்தின் பின்னர், தமிழ் தேசிய கூட்டமைப்பு பேச்சுவார்த்தைகள் மூலம் பிரச்சனைகளை தீர்க்க முயற்சிக்கிறது. எதற்கு இன்னும் அரசுடன் பேசுகிறீர்கள், விலகுங்கள் என எம்மிடம் பலர் சொல்கிறார்கள். விலகி விட்டு அடுத்து என்ன செய்வது?

பேச்சுவார்த்தையிலிருந்து விலகி விட்டு ஆட்லறி அடிப்பதா?“ என தெரிவித்தார்.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here