கினிகத்தேன நகரிலுள்ள 7 வர்த்தக நிலையங்களை அகற்ற உத்தரவு!

மலையகத்தில் நிலவும் கடும் மழையுடனான வானிலையால் மண்சரிவு எச்சரிக்கைக்குள்ளாகியுள்ள கினிகத்தேன நகரிலுள்ள 7 வர்த்தக நிலையங்களை அப்புறப்படுத்துமாறு, குறித்த வர்த்தக நிலையங்களின் உரிமையாளர்களுக்கு அம்பகமுவ பிரதேசசபையின் தவிசாளர் ஜயசங்க பெரேரா, இன்று (13) உத்தரவிட்டுள்ளார்.

கினிகத்தேன நகரில் இதற்கு முன்னர் மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள 42 வர்த்தக நிலையங்களுக்கு மேலதிகமாக மேலும் 7 வர்த்தக நிலையங்களுக்கு இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

கினிகத்தேனை பிரதேசத்தில் நேற்றிலிருந்து, தொடர்ச்சியாக மழை பெய்து வருவதன் காரணமாக, ஹட்டன்- கொழும்பு பிரதான வீதியின் தியகல பிரதேசத்தில் மண்சரிவு ஏற்பட்டு வருவதுடன், கற்பாறைகளும் சரிந்து வருவதால், சாரதிகள் இந்த வீதியைத் தவிர்த்து மாற்று வீதிகளைப் பயன்படுத்துமாறும் அம்பகமுவ பிரதேசசபையின் தவிசாளர் ஜயசங்க பெரேரா ​வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here