சல்வார் தாவணி கழுத்தில் இறுக்கியதில் 8 வயது சிறுவன் மரணம்

வவுனியா, செட்டிகுளம் பகுதியில் சல்வார் தாவணியில் விளையாடிக் கொண்டிருந்த நிலையில் கழுத்தில் தாவணி இறுகி 8 வயது சிறுவன் ஒருவர் இன்று மதியம் மரணமடைந்துள்ளார்.

இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

வவுனியா, செடடிகுளம், முகத்தான்குளம் பகுதியில் உள்ள தனது வீட்டில் சகோதரனுடன் சல்வார் தாவணியில் யன்னல் ஊடாக கழுத்தில் கொழுவி விளையாடிக் கொண்டிருந்த போது குறித்த தாவணி இறுகியதில் 8 வயது சிறுவன் ஒருவர் சம்பவ இடத்திலேயே மரணமடைந்துள்ளார்.

சல்வார் இறுகியதும் 5 வயது சகோதரன் கூச்சலிட்டு தனது மற்றைய சகோதரன் மற்றும் உறவினர்களின் உதவியுடன் சிறுவனை மீட்ட போதும் அது பயனளிக்கவில்லை. சிறுவன் குறித்த இடத்திலேயே மரணமடைந்தார். குறித்த சிறுவனின் சடலம் செட்டிகுளம் வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இச்சம்பவத்தில் சசிதரன் கிருசான் (8) என்ற சிறுவனே மரணமடைந்தவராவார். குறித்த சிறுவனின் தந்தையார் கொலைச் குற்றச்சாட்டு ஒன்று தொடர்பில் 2015 ஆம் ஆண்டு முதல் மரணதண்டனை கைதியாக கண்டி போகம்பர சிறைச்சாலையில் உள்ள நிலையில் சிறுவன் தனது தந்தையாரை இவ்வாறு தான் கொலை செய்வார்களா என கழுத்தில் இறுக்கி பல தடவை வினவியதுடன், தந்தையார் தொடர்பில் மன அழுத்திற்கு உள்ளாகியிருந்ததாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பில் செட்டிகுளம் பொலிசார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here