நல்லூர் ஆலய சூழலில் 3 இளைஞர்கள் கைது!

நல்லூர் கந்த சுவாமி ஆலய மஹோற்சவம் இடம்பெற்றுக் கொண்டிருக்கும் நிலையில் நேற்று (12) இரவு 10 மணி அளவில் ஆலய சூழலில் சந்தேகத்திற்கிடமான முறையில் நடமாடிய 3 இளைஞர்கள் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த 3 இளைஞர்களும் நேற்று இரவு 10 மணி அளவில் ஆலய வளாகத்துக்குள் நடமாடியதனால் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளதாக யாழ்ப்பாண பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்தார்.

மேலும், கைது செய்யப்பட்ட 3 இளைஞர்களும் கிளிநொச்சி மற்றும் முழங்காவில் பகுதிகளை சேர்ந்தவர்கள் எனவும், அவர்களிடம் தொடர்ந்து விசாரணைகள் மேற்கொள்ளப்படுவதாகவும் யாழ். பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்தார்.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here