ஜெருசலேமில் பலஸ்தீனியர்களின் புனித தலத்தில் இஸ்ரேல் தாக்குதல்!

ஜெருசலேமில் முஸ்லிம்களின் மூன்றாவது புனித வழிபாட்டிடமான அல்-அக்ஸா மசூதி வளாகத்தில் ஏற்பட்ட வன்முறையில் 14 பலஸ்தீனியர்கள் காயமடைந்தனர். பாலஸ்தீனியர்கள் மீது கண்ணீர் புகைக்குண்டு தாக்குதலை இஸ்ரேல் பாதுகாப்பு படையினர் மேற்கொண்டனர். இரண்டு இளைஞர்களையும் கைது செய்தனர்.

முஸ்லிம்கள் அல்-அக்ஸா மசூதி வளாகம் என்றும் யூதர்கள் கோயில் மலை என்றும் குறிப்பிடுகின்றனர். தொழுகைக்காக ஞாயிற்றுக்கிழமை காலை ஜெருசலேமின் பழைய நகரத்தில் பல்லாயிரக்கணக்கான முஸ்லிம்கள் திரண்டிருந்தனர். இது சவுதி அரேபியாவில் மக்கா மற்றும் மதீனாவுக்குப் பிறகு யூதர்களுக்கான புனிதமான இடமாகவும், முஸ்லிம்களுக்கான மூன்றாவது புனித இடமாகவும் உள்ளது.

பண்டைக்காலத்தில் இரண்டு விவிலிய கோயில்களின் அழிவுக்குரிய யூதர்களின் துக்க நாளான ஒன்பதாவது ஞாயிற்றுக்கிழமையும் நேற்று ஆகும்.

இது நீண்ட காலமாக இஸ்ரேல்-பலஸ்தீன மோதலின் மையப்பகுதியில் ஒரு முக்கிய புள்ளியாக இருந்து வருகிறது. யூதர்களை மசூதி வளாகத்திற்குள் நுழைய காவல்துறை அனுமதிக்கும் என்ற செய்தி பரவியது், பலஸ்தீனியர்கள் வளாகத்திற்குள் கூடி எதிர்ப்பில் ஈடுபட்டனர். ‘அல்லாஹு அக்பர்’ என்று கோஷமிட்டு, காவல்துறையினர் மீது கற்களை வீசினர். முஸ்லிம்கள் மீது இஸ்ரேல் பொலிசார் இறப்பர் தோட்டா, கண்ணீர் புகைக்குண்டு தாக்குதல் நடத்தினர்.

இஸ்ரேலிய மற்றும் முஸ்லீம் அதிகாரிகளுக்கு இடையிலான நீண்டகால ஏற்பாட்டின் கீழ் யூதர்கள் வளாகத்தில் பிரார்த்தனை செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. யூதர்கள் புனித ஸ்தலத்திற்குள் நுழைவதைத் தவிர்க்க வேண்டும் என்பதையும் யூத மரபு கூறுகிறது.

ஆனால் சமீபத்திய ஆண்டுகளில், இஸ்ரேலிய மத தேசியவாதிகள் இந்த ஏற்பாட்டை சவால் செய்து, மசூதிக்கு வருகிறார்கள். யூத தீவிரவாதிகள் மசூதியை அழிக்கவும், விவிலிய ஆலயத்தை மீண்டும் கட்டவும் அழைப்பு விடுத்துள்ளனர்.  இந்த வருகைகளை பலஸ்தீனியர்கள் ஆத்திரமூட்டல்களாக கருதுகின்றனர். மேலும் இஸ்ரேல் அந்த இடத்தை கையகப்படுத்தவோ அல்லது பிரிக்கவோ விரும்புகிறது என்று நீண்ட காலமாக அஞ்சுகின்றனர்.

சனிக்கிழமையன்று, எல்லை தாண்டிய தாக்குதலை நடத்த முயற்சித்ததாக கூறி நான்கு பலஸ்தீனிய போராளிகளை இஸ்ரேலிய துருப்புக்கள் கொன்றது.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here