பழைய நினைவில் நீலநிற ஆடையுடன் தமிழ் அரசு கட்சி கூட்டத்திற்கு வந்த மஹிந்தவின் முன்னாள் சகா!

தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஆதரவாளர்களிற்கு அரசியல் விளக்கமளிக்கும் இரண்டு கூட்டங்கள் இன்று மட்டக்களப்பில் நடந்தது. மாவட்டத்தில் பல இடங்களிலுமிருந்து கட்சியின் ஆதரவாளர்கள் அழைத்து வரப்பட்டு, பிரச்சார நடவடிக்கைகள் நடந்தன.

இதன்போது சுவாரஸ்யமான சம்பவமொன்று நடந்தது.

பட்டிருப்பு தொகுதியில் காலையில் பிரச்சாரக் கூட்டம் இடம்பெற்றது.

பட்டிருப்பு தொகுதியில் தமிழ் அரசு கட்சியின் புதிய பிரமுகராக, இ.சாணக்கியன் உருவாகியுள்ளார். சில வருடங்களின் முன்னர் வரை மஹிந்த ராஜபக்சவின் மட்டக்களப்பு பிரமுகராக செயற்பட்ட அவர், தமிழ் அரசு கட்சியின் பக்கம் தாவினார். இரா.சம்பந்தன், மாவை சேனாதிராசா, எம்.ஏ.சுமந்திரன் ஆகியோர் மட்டக்களப்பு செல்லும்போது, இவர்களை தங்க வைத்து, விருந்தளித்து, கட்சித் தலைமையுடன் நெருங்கியிருந்தார்.

இதனால், “கட்சி தலைவர்களிற்கு பிரியாணி வாங்கிக் கொடுத்து, தேர்தலில் ஆசனம் பெறலாம்“ என மாவட்டத்தின் தமிழ் அரசு கட்சியினரிடமே அதிருப்தி எழுந்திருந்தது.

இந்தநிலையில், இன்று நடைபெற்ற கூட்டத்திற்கு சாணக்கியன் நீலநிற மேற்சட்டையுடன் கூட்டத்திற்கு வந்திருந்தார். இதை அவதானித்த பிரமுகர்கள் சிலர், சுதந்திரக்கட்சி கூட்ட நினைப்புடன் நீலநிற சட்டையுடன் வந்து விட்டீர்களா என கேட்டு, மஹிந்த முகாமில் இருந்து வந்துவிட்டு நீலநிற சட்டையுடன் இந்த கூட்டத்திற்கும் வருவது நல்லதல்ல என சுட்டிக்காட்டினர்.

இதையடுத்து, நிகழ்வின் பாதியில் திடீரென சாணக்கியன் காணாமல் போயிருந்தார்.

பின்னர் சிறிது நேரத்தில் மேற்சட்டையை மாற்றி, வெள்ளை சட்டையுடன் கலந்து கொண்டார்.

இன்று கூட்டத்தில் கலந்துகொண்ட சுமார் 100 பேருக்கான மதிய உணவு, சணக்கியனிற்கு சொந்தமான களுவாஞ்சிக்குடி கடலோர பங்களாவில் வழங்கப்பட்டது.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here