வவுனியாவில் இளைஞர்கள் எழுச்சிக்கிண்ண மென்பந்துப் சுற்றுப் போட்டி

வவுனியாவில் இளைஞர்கள் எழுச்சிக் கிண்ண மென்பந்து சுற்றுப் போட்டியை வடமாகாண முன்னாள் முதலமைச்சரும், தமிழ் மக்கள் கூட்டனியின் செயலாளருமான க.வி.விக்னேஸ்வரன் இன்று (11) ஆரம்பித்து வைத்தார்.

வவுனியா, கற்பகபுரம், நியூ வன் விளையாட்டுக் கழக மைதானத்தில் தமிழ் மக்கள் கூட்டனியின் வவுனியா மாவட்ட அமைப்பாளர் செ.சிறிதரன் தலைமையில் இந்நிகழ்வு இடம்பெற்றது.

இதன்போது வடமாகாண முன்னாள் முதலமைச்சரும் தமிழ் மக்கள் கூட்டனியின் செயலாளருமான க.வி.விக்கினேஸ்வரனினால் 7 விளையாட்டுக் கழகங்களுக்கு விளையாட்டு சீருடைகளும் வழங்கி வைக்கப்பட்டதுடன், விளையாட்டு வீரர்களை வாழ்த்தி விளையாட்டு நிகழ்வை ஆரம்பித்து வைத்தார்.

இந்நிகழ்வில், வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், முன்னாள் மாகாண சபை உறுப்பினர் ம.தியாகராஜா, தமிழ் மக்கள் கூட்டனியின் கொள்கை பரப்பு செயலாளர் க.அருந்தவபாலன், தமிழ் மக்கள் கூட்டனியின் மத்திய குழு உறுப்பினர்கள், ஆதரவாளர்கள், விளையாட்டு வீரர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here